Sunday, August 25, 2013

கவிதை : என் இனிய கணினியே.


என் இனிய கணினியே.
இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக
நான்
யார் முகத்தையும் பார்த்ததில்லை.
இவ்வளவு நேரம் யாரோடும்
விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை.
அதெப்படி
உன்னால் மட்டும் முடிகிறது ?
கண்ணுக்குத் தெரியாத
கணிதச் சுருக்கங்களின் சுளுக்கெடுக்க ?
முகம் மனசின் கண்ணாடி
என்பது
முகமே கண்ணாடியாகிப் போன
உன்னிடம் தானே உண்மையாகிறது ?
பொழுதுகள் மாறினாலும்
முகங்கள் மாறினாலும்
விடைகளை மாற்ற மறுப்பது
நீ மட்டும் தானே.
நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் ஒருவேளை
காகிதக் கட்டுக்களில்
புதைக்கப் பட்டிருக்கலாம் !!!
நீ மட்டும் இல்லையென்றால்
உலகைப் பிடித்தெடுக்கும்
ஓர் வலை
உருவாகாமலேயே போயிருக்கலாம்.
நீ என்ன செய்வாய் என்று கேட்ட காலம்
போய்விட்டது.
என்ன செய்ய மாட்டாய் என்கிறது
கலியுகம்.
யாரோ பகல் கனவு கண்டால்
அதை
பிரதி எடுத்துக் கொடுக்கிறாய்.
இரவுக் கனவை இரவல் வாங்கி
மென்பொருளாய் மொழி பெயர்க்கிறாய்.
இப்போதெல்லாம்
மனித மொழிகளுக்கிங்கே மரியாதை இல்லை
கணினி மொழிகளுக்குத் தான்
உலக அங்கீகாரம்.
என்ன..???
விரல்களால் பேச வேண்டும்
அது ஒன்று தான் வித்தியாசம் !!!
சில ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் உன்னை ஆண்டுகொண்டிருந்தது
இப்போது
நீ ஆட்சியைக் கைப்பற்றி விட்டாய்.
மிட்டாய்க் கடைகளின்
இனிப்புக் கணக்குகள் கூட
நீ இல்லையென்றால் கசந்து போகிறது.
ஏனென்றால்
எங்கள் மூளைக்குச் செல்லும்
முக்கால் வாசி நரம்புகளும்
விரலுக்கும் விழிகளுக்குமாய்
இடம் பெயர்ந்து விட்டது.
எங்கள் மானிட சமூகம்
வைரஸ் வினியோகம் செய்வது,
நோய் தருவதும் மருந்து தருவதும்
நாங்கள் என்பதை
நீ
மறந்துவிடாமல் இருக்கத்தான்.
காலம் மாறிவிட்டது
முன்பு கலப்பை இருந்த இடத்தில்
இப்போது கணிப்பொறி.
முன்பு வரப்புகள் இருந்த இடத்தில்
இப்போது வன்பொருள்கள்.
ஆனாலும் எங்கள் வயிறு
இன்னும்
மென்பொருள் தின்னப் பழகவில்லை.

Saturday, September 3, 2011

மொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்...

தன்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8 னை, மற்ற சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அனுமதித்த பின்னரே, அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும்.

சில சாப்ட்வேர் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத வகையில் சில விளைவுகளை ஏற்படுத்து கின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்கைப் புரோகிராமில் இணைத்துத் தரப்பட்டிருந்த ஆட் ஆன் புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் பல முறை கிராஷ் ஆகும் விளைவினைத் தோற்றுவித்தது. இதனால், அதனை அடியோடு விலக்க மொஸில்லா நடவடிக்கை எடுத்தது. 2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட், சத்தமில்லாமல், பயர்பாக்ஸ் பிரவுசரில் ஒரு ஆட் ஆன் புரோகிராமினை இணைத்தது. இதனை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இது போல சாப்ட்வேர் புரோகிராமுடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்களில் சில மட்டுமே, பிரவுசருடன் இன்ஸ்டால் செய்திட அனுமதி கேட்கின்றன. மற்றவை, அனுமதியின்றி, இன்ஸ்டால் ஆகி, தொல்லைகளைத் தருகின்றன. பிரவுசர் மெதுவாக இயக்கத்திற்கு வருதல், இணையப் பக்கங்கள் தோன்ற அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற பிரச்னை களை இந்த ஆட் ஆன் புரோகிராம்கள் உருவாக்குகின்றன. பயனாளர்கள் இவற்றை உணரும் பட்சத்தில், இவை இயங்காமல் தடுக்கவும் அவர்களால் இயலுவதில்லை.
எனவே தான், மொஸில்லா, நவம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 8 முதல், பயனாளர்களின் அனுமதியின்றி, இத்தகைய ஆட் ஆன் புரோகிராம்கள் இன்ஸ்டால் ஆக அனுமதி தராத வகையில், தன் பிரவுசரை வடிவமைக்க இருக்கிறது...

மங்காத்தா – திரை விமர்சனம்





’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு…


அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.


ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது…திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா..அல்லது அம்போவா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித் – ஜெயப்ரகாஷ்-த்ரிஷா-அர்ஜுன் – 4 பேர் – என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விர்ருவிர்ருப்பு தான்..திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

நெகடிவ் கேரக்டரில் அஜித்…..தலயின் ஐம்பதாவது படம். பொதுவாக இந்த மாதிரி முக்கியமான படத்தை எல்லோரும் சோலோ ஹீரோவாகவே செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லாமல் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே தைரியமான முடிவு தான். நாற்பது வயது ஆள், அதுவும் போலீஸ் என்று சொல்லிவிட்டதால் தொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது. வயதிற்கேற்ற மெச்சூரிட்டியுடன் ப்ளான் செய்வதும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமாக அஜித் கலக்கி எடுக்கிறார். தொப்பை என்று கிண்டல் பண்ணுவோருக்கு பதிலடியாக ‘ஆமாய்யா பார்த்துக்கோ’ எனும்படி ஒரு பாடலில் சட்டை இல்லாமலே……..செம தில் தான்! இந்தப் படத்தில் ஆடவும் செய்திருக்கிறார், நாற்பது வயதிற்கே உரிய கூச்சங்களுடன். அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தல திரும்பக் கிடைத்திருக்கிறார்.

கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் அதையாவது பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்……அஞ்சலிக்குட்டியைக் கவனிப்போம்.

’வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.

அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம், நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார்.


படத்தில் குறையென்று பார்த்தால்…….. அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி+டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்ரகாஷ் அஜித்தை சந்தேகபடாதது, மும்பையில் எல்லா கேரக்டரும் தமிழ் பேசுவது, தேவையில்லாமல் வரும் மியூட் செய்யப்பட்ட ஆங்கில.தமிழ் கெட்ட வார்த்தகள், எதிர்பார்த்த கிளைமாக்ஸ், அஜித்தின் பணவெறிக்கு காரணாமாக எதுவும் சொல்லப்படாதது(நிஜத்துக்கு அது சரி தான்..சினிமாவில் நம் மக்களுக்கு காரணம்/நியாயம் தேவை) இந்த மாதிரிக் கதைக்கு இரண்டு வகையான கிளைமாக்ஸ் தான் வைக்க முடியும்..அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருகிறது.

யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு! சிக்கலான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் எடிட்டிங் கைகொடுக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட சில மொக்கை சீன்களை இன்னும் கொஞ்சம் ’கட்’டி இருக்கலாம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் மங்காத்தா சாங்கில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.
படம் நல்ல படமா, இல்லையா என்றால்……….ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர். நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான். மற்றவர்களும் ரசிக்க முடியும். வெங்கட் பிரபு வைத்திருக்கும் அந்த கிக்கிலிபிக்கிலி குரூப்பைக் கொஞ்சம் அடக்கி, இன்னும் படத்தை ஷார்ப் ஆக்கியிருக்க முடியும். இருப்பினும் சமீபத்தில் வந்த கமர்சியல் படங்களை ஒப்பிடும்போது இது பெட்டர் தான். அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்.

மங்காத்தா – ஆட்டம் மோசம் இல்லை!

நன்றி :http://123tamilcinema.com/201108318806.html

Friday, April 30, 2010

காதல் கவிதை!!

நீ இல்லா இரவுகளில்...

நிலவினை ரசிக்கிறாய் அழகென்று!
நிலவுகள் பிடிப்பதில்லை
நீ இல்லா இரவுகளில்...

உன் மடியில் தலை சாய்த்து
நிலவு பார் என்பாய்...
பார்ப்பத்தென்ன முத்தமிடுறேன்
என்று முகத்தில் இதழ் பதிப்பேன்!

வெட்கத்தில் பூத்த சிரிப்புளோடு
சில நூறு விண்மீன்களையும்
சிந்துவாய்!

நிலவு முத்தமிடாதா என்பேன்?
முகம் நெருங்கி முத்தமிடாமல்
கன்னம் கில்லுவாய்
மெல்லிய உன் விரல்களால் !

நிலவே நீயில்ல இரவுகள்
எத்தனை கொடியது!!


காதல் கொஞ்சம்...

உன் கண்பார்க்கும்
திசையெங்கும்...
சூரிய ஒளியாய்...
பரவி படர்கிறது..
காதல்...

------------------------------------------------------------------------

நீ நனைவாய்..
என்ற நம்பிக்கையிலேயே ..
வருகிறது போலும்..
மழையும்.

உன்னை நனைக்காமல்..
நிற்பதே இல்லை..
எந்த மழையும்.

------------------------------------------------------------------------

அகல் விளக்கு ஏந்தி...
மிக அழகாய் நீ வந்தால்
கூட்டத்தில் ஒளிந்தபடி...
கடவுளும் பார்த்திருப்பான்.

------------------------------------------------------------------------

படபடவென பேசும்
தருணங்களில்...
நீ..
அழகானவள்.
மௌனம் போர்த்தி
அமர்ந்திருக்கும் தருணங்களில்..
நீ...
பேரழகானவள்..

------------------------------------------------------------------------

கிளி ஜோசியம் பார்க்க வேண்டி..
அடம்பிடிக்கிறாய்.
ஏன் உனக்கு புரிவதில்லை...
கிளி சீட்டெடுத்து போடுவதுதான்..
கிளி ஜோசியம்....
கிளிக்கு சீட்டெடுத்து போடுவதல்ல...

------------------------------------------------------------------------

நான் காதலை
தேடிக் கொண்டிருந்தேன்...
நீ வந்தாய்...
இப்பொழுது...
என்னை தேடிக் கொண்டிருக்கிறேன்.

------------------------------------------------------------------------

உன்னையறியாமல் நீ..
என் தோள் சாய்ந்து..
உறங்குகிறாய்...
தோள்களை கருவறையாக்கி...
சில நொடி நானும்..
தாயாகிறேன்.

------------------------------------------------------------------------

என் விக்கல் நிறுத்த..
நீ கொடுத்த
முத்தத்தில்...
எனக்கு காய்ச்சலே
வந்துவிட்டது போ..

------------------------------------------------------------------------

என் காதலை பற்றி..
சொல்ல சொன்னாய்...
கவிதைகளை கொட்டினேன்..

உன் காதலை பற்றி..
சொல்ல சொன்னேன்..
வெட்கங்களை கொட்டினாய்..

தோல்வியை
ஒப்பு கொள்கிறது...
என் கவிதைகள்.

------------------------------------------------------------------------

எங்கோ நீயும்..
படித்துக் கொண்டிருப்பாய்...
என்ற நம்பிக்கையிலேயே..
பிறக்கின்றன...
உனக்கான என் கவிதைகள்.

என் காதலை பற்றி..
சொல்ல சொன்னாய்...
கவிதைகளை கொட்டினேன்..

உன் காதலை பற்றி..
சொல்ல சொன்னேன்..
வெட்கங்களை கொட்டினாய்..

தோல்வியை
ஒப்பு கொள்கிறது...
என் கவிதைகள்.



கவிதை.... காதல்...

காதல் ஒரு வித்தியாச மனநோய்...
நம்மை பிடிப்பவர்களை வெறுக்க சொல்லும்...
நமக்கு பிடித்தவர்கள் நம்மை வேறுத்துப்போனால்....

வீதிக்கு ஒரு சோகம்...
தெருவுக்கு ஒரு கவிஞன்....
ஏய் காதலே உன் ஊடகம் தான் என்ன???
இப்படி புழக்கத்தில் உள்ளேயே எங்களிடம்.....


கை கோர்த்த ஸ்பரிசங்கள்.....
கட்டிக்க சொன்ன கணங்கள்....
குழந்தை சிணுங்கல்கள்....
இன்னும் ஏன் சுமக்கிறேன் என்னை அறியாமலேயே?????
உன் முகம் கூட நினைவில்லையே எனக்கு!!!!!!!!


புயல் எச்சரிக்கை கொடி எண் எட்டை ஏற்றுங்கள்.....
அந்த தெரு முனையில்....
இது அவள் அலுவலகம் செல்லும் நேரம்...


எதாவது ஒரு தலைப்பு கொடுங்கள்....
இரண்டு நிமிடத்துக்குள் ஒரு கவிதை சொல்கிறேன்.....
தவறினால் ஏன் என கேளுங்கள் என் காதலியை.....
இப்போ புரிந்திருக்கும்.....
கவிதை என தலைப்பு கொடுத்து
அரை நிமிடமே ஆன என் தோழிக்கு......


என் கவிதைகள் எல்லாம்......
நாலு வரியை கூட தாண்டுவதில்லை....
பின்னே...
நாலு நிமிடத்துக்கு மேல் உன்னை
நேருக்கு நேராய் பார்க்கும் வலிமை எனக்கில்லை.....


மூளை ஏற்கிறது.....
மனசு மறுக்கிறது....
எப்படி உன்னை விட்டு கொடுக்க???....
நேற்று எவனையோ கூட்டிவந்து
காதலன் என்றாய் என்பதற்காக????......


கணவன், மனைவி சண்டை தீரும்....
இந்த வார ராசி பலன்ல போட்டிருக்கு...
நாம எப்போ சண்டை போட்டோம் ???...
இதுக்குதான்.....
கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா கேக்கரியா நீ......

கரை காதலிக்கு....
கடலின் இடைவிடா.....
காதல் முறையீடு....
அலை....

நிம்மதியை கொடு என்கிறேன்....
போய், தொலைத்த இடத்தில தேடு என்கிறாய்....
ஏய் சாமி!!!!! உனக்கு எப்படி புரியவைப்பது.....
கடைசியாய் அவளை இந்த கோவிலில்தான் பார்த்தேன்...

மனது முழுவதும் உன் நினைவுதான்......
வேறெதிலும் கவனம் இல்லை...
அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்....
எதையோ நினைத்து தனியாய் சிரிக்கிறேன்....
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்.....
சமாளிக்கிறேன், இப்படிடிடிடிடி .................
ஆமா!!!! இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்?????....

நீ பூசிய உதட்டு சாயத்தில் ஒட்டிகொண்டது.....
என் மனசு.....

நேற்று தான் முதல் குழந்தை பிறந்தது....
இன்று இரண்டாவது குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோமே!!!!!
கனவே....
கொஞ்சம் மெதுவாக போ.....
நான் அவளோடு அணு அணுவாக வாழ வேண்டும்...

விபத்து!!!?

நிகழப்போகிற
விபத்தைப்பற்றி எதுவுமே அறியாமல்
ஒரே தண்டவாளத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிற
ரயில்களைப் போல
நீ வந்துகொண்டிருக்கிற தெருவில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்...................................


உண்மை

பூக்கள் பூக்கும் ஓசையை
பதிவு செய்ய முயற்சி
செய்து தோல்வி கண்டநராம்
வீஞயானிகள்....
பாவம்!
உன் புன்னகை ஓசையை
கேட்காதனாலோ என்னவோ
தெரியவில்லை.... ...

ஒளித்துகொண்டேன்......

சில காலம்
எனக்குள் நானே
ஒளிந்து கொண்டிருந்தேன்.........

இப்பொழுது.......

எனக்குள் உன்னையும்
ஒளித்துகொண்டேன்......
என்னையும் அறியாமல்....


அழகு!

உன் வீட்டு
முகக்கண்ணாடியும்
அழாகாய்த்தான் இருக்கிறது!
உந்தன்
அழுக்கு பொட்டுக்களை
அழகாய் சுமந்தபடி!


பிரிவு

நிகழ்வுகளின் துவக்கமாய்
மௌனம்.
என் மரணத்தின் துவக்கமாய்
உன் பிரிவு.


காதல் தேர்வு

வார்த்தைகளுக்கு பூஜ்யம் மார்க்.

உன் விழிகள் மட்டும் சதம் அடித்தது

நான் எழுதிய காதல் தேர்வில்


பூ ...

யார் கூறியது நான் பறிக்கும்போது

இறந்துவிடுகிறேன் என்று ?

அவள் கூந்தலில்தான் எனது வாழ்கையே.............தொடரும்............


தொடங்குகிறேன்

வள்ளுவன் காலத்தில்
நீ வளர்ந்திருந்தால்
விரல் தேய
வடித்திருப்பான்
நான்காம் பால்
அழகென்று உன்னை

கம்பன் கற்ற
தமிழும்
தோற்றிக்கும்
உனக்கான
உவமை
தோன்றாமல்

வெள்ளித்திரையின்
விழித்திரையில்
நீ மலர்ந்திருந்தால்
மலர்களுக்கெல்லாம்
மகாராணி ஆகி இருப்பாய்

விண்ணுலகில்
விதைபட்டிருந்தால்
விண்மீன்களின்
தலைவியாகிருப்பாய்

ஆபரணத்தங்கத்தின்
விலையேற்றம்
ஒவ்வொரு நாளும்
நீ உன்னை மறந்து
மகிழும் போதுதான்

பொன் மொழிகளை
மாற்றுகிறேன்
பெண்ணே உன்னகாக

"என் யாதும் நீயே
யாவரும் உன்
அழகின் அடிமையே"

"நீரென்றி அமையாதடி
இவ்வுலகு
நீயின்றி அமையாதடி
இவ்வுயிர்"

உன் பாத சுவடுகளின்
தண்டவாளங்களில்
தொடங்குகிறேன்
என் கவிதை
பயணத்தை!!!
"நல்ல பயணம்
என்ற வாழ்த்துகளுடன்"!!!


தேவதைக்கு நெருக்கமானேன்...!!

கவனம் சிதறும் படி
ஆடை உடுத்தும் பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால் கவனம் ஈர்த்த
அழகி நீ...!!

சிரிக்க தெரிந்தவர்கள்
கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள்
என்பார்கள்...
ஆனால் நானோ உன்னை
சிரிக்க வைத்து
தேவதைக்கு நெருக்கமானேன்...!!

அழகாய் இயற்க்கை காட்சி கண்டால்
இப்படி சொல்லுவாய் நீ
"அடடா என்ன ஒரு அழகு என்று...!?"

அழகி உன்னை கண்டதும்
இயற்க்கை இப்படி அதிசயிக்கும்..
அடடா எனக்கு போட்டியா..? என்று...!!"











Tuesday, April 27, 2010

என்னவளுக்காக

கருமேகங்கள் கதிரவன் மேல்
காதல் கொண்ட மாலையது...
ஒரு வழிப்பாதை தான் அது...
அவளின் ஓரபார்வையில்
சொர்கமயமானது எனக்கு...

ஓடும் நீர்தனில் உருண்டோடும்
கல் போல்...அவளின்
நினைவில் தல்லாடி தடுமாறி
நடைபோட்ட நாட்கள்...

பத்தே நாள் தான்
பஞ்சாய் பறந்தது...

எந்த இரவு வரக்கூடாது என்று
தவித்தேனோ அந்த இரவு...

பயணிக்க காத்திருந்தாள் என் வரவை
எதிர்நோக்கி
ஓரிரு நொடிதான் ஆனால்
அழுத்தமான பார்வை.!.
பதுமையாய் கையசைத்தாள்
இதயம் கனத்தது...

இமையினுள் முட்கள்
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
அவளின் பிரிவை...

காதல் தன்னை நாடி வருபவர்களுக்கு
தன் காதலியின்(வலி) அருமையை
அமுதூட்டுகிறது...

மீண்டும் காத்திருக்கிறேன் பிரிவின் சிறையில்...
இதயத்தை சுமக்கும் முட்களை
தாங்கியபடி...
என்னவளுக்காக...